மாலவி நாட்டுத் துணை அதிபர் சென்ற ராணுவ விமானம் மாயம்! தேடும் பணி தீவிரம்!

Malavi Vice President
Malavi Vice President
Published on

மாலவி நாட்டுத் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேர் சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. இதனையடுத்து தற்போது தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியின் அதிபர், லாசரஸ் சக்வீரா ஆவார். அதேபோல் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா உள்ளார். இந்தநிலையில் நேற்று துணை அதிபர் மற்றும் அவருடன் சேர்ந்து 9 பேரும் ராணுவ விமானம் ஒன்றில் லிலோங்வியில் இருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்ட சில நேரங்களில் திடீரென்று மாயமானது. அதாவது தொடர்பிலிருந்து விலகியது. இதனையடுத்து பதறிப்போன அதிகாரிகள், உடனே விமானத்தைத் தேட உத்தரவிட்டனர். அதேபோல் இப்போதுவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. விமான படையினரும் ராணுவத்தினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விமானத்தைப் பற்றியும், அதில் பயணம் செய்தவர்கள் பற்றியும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது ஒரு தகவல் வெளியானது. அதாவது முன்னாள் அமைச்சர் ஒருவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் ராணுவ விமானத்தில் அங்கு சென்றனர். இந்த வேளையில் மோசமான வானிலை நிலவியதாகவும், இதனால் விமானம் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா? இது என்ன ஆச்சர்யம்!
Malavi Vice President

தற்போது வரை விமானம் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேரின் கதி என்ன ? என்பதும் தெரியவில்லை. இதற்கிடையே இந்த விமானத்தில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் எங்கு சென்றனர்? என்பது பற்றி விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபக்காலமாக விமானம் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர்தான் ஈரான் அதிபர் சென்ற விமானம், இதேபோல் தொடர்பு இல்லாமல் மாயமானது. பிறகு தேடுதல் வேட்டைக்குப்பின்னர் விமானம் விபத்துக்குள்ளானதும், அதில் பயணித்த அனைவரும் பலியாகினர் என்பதும் தெரியவந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com