ஐந்தே நிமிடத்தில் குழந்தை to குமரியாக மாறிய அதிசயம்... அப்பாவின் இந்த செயலால் பலரும் பிரமித்துப்போன தரமான சம்பவம்!

ஐந்தே நிமிடத்தில் குழந்தை to குமரியாக மாறிய அதிசயம்... அப்பாவின் இந்த செயலால் பலரும் பிரமித்துப்போன தரமான சம்பவம்!

தாயானாலும் தந்தையானாலும் பிள்ளைப் பாசம் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று இன்றளவும் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் ஹாஃப்மீஸ்டர் என்பவர் தனது மகளின் குழந்தை வயது முதல் பருவ வயது வரை எப்படி வளர்ந்து வருகிறார் என்பதை, அவள் பிறந்த நாளில் இருந்து 20 வயது பூர்த்தியாகும் வரை அதை புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.

அப்படி பதிவு செய்யும்போது, குழந்தைக்கு பயன்படுத்தும் போர்வையை கடைசிவரை மாற்றாமல் அதையே பேக்ரவுண்ட்டில் பின்னணியில் வைத்து, ஒவ்வொரு வாரமும் புகைப்படமாக எடுத்து பதிவு செய்தபின், அந்த புகைப்படங்கள் அனைத்தையும் டைம்லேப்ஸ் வீடியோவாக ஒருங்கிணைத்து அதை யூடியூப்பில் கடந்த 2019ம் ஆண்டு பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோவானது 2.4 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ ரெடிட் தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

பாசமிகு தந்தையால் 20 வருட உழைப்பாக எடுக்கப்பட்டுள்ள வீடியோவையெல்லாம் ஒன்றிணைத்து டைம்லேப்ஸ் செய்து வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் ஒருசில நிமிடத்திலேயே குழந்தையானவள் குமரியாக மாறும் காட்சி பார்வையாளர்களால் அதிகளவில் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.

ரெடிட் தளத்தில் வெளியாகி சில மணிநேரத்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்கள் பதிவான நிலையில், தந்தையின் இந்த பாசத்தையும், நெகிழ்ச்சியையும் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com