டிக்கெட்டுக்காக ஏர்போர்ட்டில் குழந்தையை விட்டு சென்ற நவீன தம்பதிகள்!

டிக்கெட்டுக்காக ஏர்போர்ட்டில்  குழந்தையை விட்டு சென்ற நவீன தம்பதிகள்!
Published on

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தி பரபரப்பை கிளறியுள்ளது.

இஸ்ரேல் நகரமான டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் பெல்ஜிய பாஸ்போர்ட் வைத்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் குழந்தையோடு வந்துள்ளனர். விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த தம்பதி குழந்தைக்கு டிக்கெட் வாங்கவில்லை. விமான ஊழியர்கள் குழந்தையை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு ரியான் ஏர்லைன்ஸ் விமானத்தில் செக்-இன் செய்து கொண்டிருந்தபோது, ​​அவர்கள் குழந்தையை விட்டுச் சென்றதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, ​​விமான முன்பதிவில் குழந்தைகளைச் சேர்க்க Ryanair ஏர்லைன்ஸ் அனுமதிக்கிறது. வயது வந்தவரின் மடியில் அமர்ந்து குழந்தை பயன் நிறுவனங்கள் $27 வசூலிக்கின்றன. அல்லது பெரியவர்கள் குழந்தை இருக்கையில் பயணம் செய்ய விரும்பினால், தனி ஏற்பாடு செய்யப்பட செய்து தரப்படுகின்றன.

ஆனால் இவை எவற்றையும் இந்த பயணிகள் பின்பற்றவில்லை. விமானத்திற்கான செக்-இன் மூடப்பட்டவுடன் தம்பதியினர் விமானத்திற்குத் தாமதமாக வந்துள்ளனர். மேலும், குழந்தைக்கான டிக்கெட்டை எடுக்க மறுத்ததுடன், தம்பதியினர் குழந்தையை விட்டுவிட்டு விமானத்திற்கான போர்டிங் கேட்டை அடையும் முன்பே செக்-இன் கவுண்டரிலிருந்த அதிகாரி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்ததால் சோதனை சாவடியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின் இஸ்ரேல் காவல்துறையால் விசாரணை நத்தப்பட்டு பின் பெற்றோரிடம் குழந்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com