இந்திய பிரதமரால் கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!

PM Modi: Chennai to Lakshadweep
PM Modi: Chennai to Lakshadweep
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயண புகைப்படங்கள் காரணமாக லட்சத்தீவு என்ற வார்த்தை கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்டு இருக்கின்றது.

கடலால் சூழப்பட்ட லட்சத்தீவு அழகிய கடற்கரைகளைக் கொண்ட, ரம்யமான இயற்கை சூழல் நிரம்பிய, உலகின் முக்கிய கடலோர சுற்றுலா தலமாக உள்ளது. இந்த இயற்கை சூழல்களை கண்டு களிக்க உலகம் முழுவதும் இருந்து ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் லட்சத்தீவை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு, அங்கு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடற்கரையில் நடப்பது போன்றும், மர நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்றும், கடலில் நீச்சல் அடிப்பது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும் லட்சத்தீவில் அழகு பிரமிப்பூட்டுகிறது என்றும் பதிவு செய்தார் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியா மக்கள் லட்சத்தீவு என்ற வார்த்தையை கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் லட்சத்தீவு என்ற வார்த்தையை பயன்படுத்தி தேடியிருக்கின்றனர். மேலும் லட்சத்தீவில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றியும் அதிக மக்கள் தேடி இருக்கின்றனர் என்று தெரிவித்து இருக்கிறது.

இந்திய பிரதமர் லட்சத்தீவு பயணம் நலத்திட்ட உதவிகளுக்கானதாக மட்டும் இல்லாமல், தற்போது லட்சத்தீவு சுற்றுலா தளங்களுக்கான மார்க்கெட்டிங் நடவடிக்கையாகவும் மாறி இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் பலருக்கும் லட்சத்தீவு பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com