அடுத்த இன்னிங்ஸ் அரசியலில் ஆரம்பம்: அம்பாதி ராயுடு அறிவிப்பு!

அடுத்த இன்னிங்ஸ் அரசியலில் ஆரம்பம்: அம்பாதி ராயுடு அறிவிப்பு!

ந்தியாவின் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் அம்பாதி ராயுடு. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். இந்த ஐபில் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றதோடு, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.

அம்பாதி ராயுடு தனது ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு, ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். இதனால் அப்போதே அம்பாதி ராயுடு விரைவில் ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பலராலும் கருத்து கூறப்பட்டது.

இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மேஜர் டி20 லீக் தொடரில் டெக்ஸாஸ் அணிக்காக இவர் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய வீரர்கள் தாங்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியும் என்பது விதி. இதனால் மேஜர் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக ராயுடு தனது ஓய்வை அறிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம், குண்டூர் தொகுதியைச் சேர்ந்த அம்பாதி ராயுடு, சமீபத்தில் அந்தத் தொகுதி மக்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராயுடு, ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களம் இறங்க இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். அதற்கு முன் மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள விரும்பியதாகவும், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார். எந்த அரசியலில் கட்சியில் இணைந்து மக்கள் பணி செய்ய இருக்கிறேன் என்பதை விரைவில் அறிவிபேன் என்றும் அவர் கூறினார்.

அம்பாதி ராயுடு குண்டூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தின் மச்சிலி பட்டணத்தில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவரது அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் விளையாட்டின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கருத்து தெரிவிக்கையில், ‘அம்பாதி ராயுடு தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com