யூடியூப், டெலிகிராம் செயலிகளில் முழு திரைப்படங்கள் கிடைப்பது போலவே, ட்விட்டரில் எலான் மாஸ்க் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட், திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை அப்லோட் செய்வதை ஊக்குவிக்கும் எனப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மாஸ்க் கைக்கு மாறியதிலிருந்தே பல புதிய மாற்றங்களை அடைந்து வருகிறது. ப்ளூடூத் வசதி, ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற அதிரடி முடிவுகளை எலான் மாஸ் எடுத்தார். இந்த முடிவினால் பலர் அதிருப்தியடைந்து பல்லாயிரக் கணக்கான யூசர்கள் ட்விட்டர் தளத்தைவிட்டு சென்றுவிட்டனர். மேலும் தொடர்ந்து அதன் யூசியர்களின் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வந்த நிலையில், அவர்களை தக்கவைக்க, அசத்தலான அப்டேட்களை அவ்வப்போது எலான் மாஸ்க் அறிவித்து வருகிறார்.
அந்த வரிசையில்தான் சமீபத்தில் புதிய ட்விட்டர் நிறுவன சிஇஓ நியமிக்கப்பட்டார். ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதி, ப்ளூடூத் யூசர்களுக்கு புதுப்புது அம்சங்கள், மேலும் 2 மணி நேரம் வரை காணொளி அப்லோட் செய்யும் வசதி ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதில் காணொளி அப்லோடு செய்யும் வசதியானது பேஸ்புக், youtube டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு போட்டியாக இருப்பது மட்டுமல்லாமல், தமிழ் ராக்கர்ஸ் போன்று புதுப் புது திரைப்படங்களை திருட்டுத்தனமாக அப்லோட் செய்வதையும் ஊக்குவிக்கும் என பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதையெல்லாம் எலான் மஸ்க் கண்டு கொள்ளவில்லை. முன்பெல்லாம் ட்விட்டர் தளத்தில் இரண்டரை நிமிடம் மட்டுமே காணொளி அப்லோட் செய்ய முடியும். ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி முழு திரைப்படத்தை அப்லோட் செய்யலாம். அதுவும் 8 ஜிபி வரையிலான HD காணொளியை அப்லோடு செய்யும் வரம்பு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, சமீபத்தில் வெளியான ஈவில் டெட் திரைப்படம் ட்விட்டரில் அப்லோட் செய்து பகிரப்பட்டது.
இதே போல, ஜான் விக் நான்காம் பாகமும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் எச்டி பிரிண்ட் இல் பதிவேற்றியுள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த மாதம் தான் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை வாரிக் குவித்தது. இந்தியாவிலும் அதிக வசூலை எட்டிய திரைப்படம், OTT-ல் வெளியாகும் சமயத்தில் ட்விட்டரில் அப்லோட் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இத்திரைப்படம் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரத்திலேயே 26 லட்சம் பேர் twitter தளத்திலேயே திரைப்படத்தை முழுமையாக பார்த்துள்ளனர். மேலும் 8,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் அந்த பதிவை ரீட்வீட் செய்து பிரபலப்படுத்தியுள்ளனர். இந்த செய்தியானது படக்குழுவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதற்கு முறையாக தற்போதே தடை போடவில்லை என்றால், எதிர்காலத்தில் ட்விட்டரும் மற்றொரு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் போல செயல்படும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.