கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?

Joseph Dituri
Joseph Dituri
Published on

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் சுமார் 93 நாட்கள் தங்கியிருந்த நபர் 10 வயது இளமையாக மாறிய சம்பவம் விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம். 

மனித உடலானது அழுத்தமான சூழ்நிலையில் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்கிறது என்பதை அரிய விஞ்ஞானிகள் விரும்பினர். எனவே இந்த ஆய்வுக்காக ப்ளோரிடா பல்கலைக்கழக பேராசிரியரும், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியுமான ‘ஜோசப் டிதுரி’ என்பவர் மூன்று மாத காலம் அட்லாண்டிக் கடப்பகுதியின் ஆழத்தில் தங்க வைக்கப்பட்டார். அட்லாண்டிக் கடலின் மேற்பரப்புக்கு கீழ் சுமார் 100 Square Feet பரப்பளவு கொண்ட இடத்தில் 93 நாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவரை 100 நாட்கள் அங்கு தங்க வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தாலும், அதற்கு முன்னதாகவே ஜோசப் வெளியே கொண்டுவரப்பட்டார். 

பின்னர் ஜோசப் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர் நீரில் மூழ்வதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ‘டெலோமியர்ஸ்’ அளவுகள் 20% நீளமாக இருப்பதைக் காண முடிந்தது. டெலோமியஸ் என்பது குரோமோசோம்களின் முடிவில் இணைக்கப்பட்டிருக்கும் டி.என்.ஏ வரிசைகளாகும். இது மனிதர்கள் வயதாகும்போது குறையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சியில் ஜோசப்பின் டெலோமியர் அளவு அதிகரித்துள்ளதால், 10 வயது இளமைத் தோற்றத்திற்கு அவர் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமின்றி ஜோசப் டிதுரியின் உடலில் 10 மடங்கு அதிகமான ஸ்டெம்சல்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், அவர் இப்போது இரவில் ஆழ்ந்த REM தூக்கத்தைப் பெறுகிறார்‌. இது தவிர அவரது கொலஸ்ட்ரால் அளவு கிட்டத்தட்ட 72 புள்ளிகள் குறைந்துள்ளதாம். இதன் மூலமாக அதிக அழுத்தம் உள்ள சூழலில் உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுவது தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வில் விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தின்போது பயன்படுத்தும் வடிவிலான அறைக்குள் ஜோசப் தங்க வைக்கப்பட்டார். ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை சுமார் ஒரு மணி நேரம் அவர் வேலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு ரப்பர் பேண்டுகளை பயன்படுத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவரது உடலின் மெட்டபாலிசம் அதிகரித்ததால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறைந்தது. ஆனால் அவருடைய தசை நிறைகளில் எந்த மாற்றமும் இல்லை. 

இதையும் படியுங்கள்:
மாஸான தோற்றத்தில் அஜித்.. வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Joseph Dituri

இதற்கு முன்னர் 73 நாட்கள் நீருக்கு அடியில் தங்கியதே உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், இப்போது அந்த சாதனையை ஜோசப் முறியடித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com