மறுபடியும் உயரத் தொடங்கிய தக்காளியின் விலை!

மறுபடியும் உயரத் தொடங்கிய  தக்காளியின் விலை!
Updated on

தக்காளி விலை அடுத்த 15 நாட்களில் குறைந்து விடும் எனவும், ஒரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்த தக்காளியின் விலை திரும்பவும் ஏற்றம் கண்டு வருகிறது.விலை உயர்வை கட்டுப்படுத்த ஏதாவது புதிய ஆலோசனைகள் இருந்து தெரியப்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்குவரவேண்டிய 800 டன் தக்காளி வரத்து தொடர்ந்து 300 டன் என்ற அளவில் குறைந்து வருகிறது. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வந்தது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ தக்காளி திடீரென்று கிலோ 60 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து, ஒவ்வாரு நாளும் 20 ரூபாய் ஏற்றத்தை சந்தித்து தற்போது ஒரு கிலோ ரூ. 100 என்கிற அளவில் விற்கப்பட்டு வந்ததது. கடந்த இரண்டு நாட்களாக மெல்ல விலை ஏற ஆரம்பித்து, தற்போது 75 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே தக்காளியின் விலை ஏற்றம் சாமானியர்கள் கடுமையாக பாதித்திருக்கிறது.

தக்காளி விலை ஏற்றம் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், தக்காளி உற்பத்தி மையங்களில் இருந்து விநியோகம் அதிகரித்திருப்பதால், அடுத்து வரும் இரண்டு வாரங்களில் தக்காளி விலை கணிசமாக குறைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை உயர்வு சிக்கலான விஷயம். ஆனாலும் சிறப்பாக கையாண்டு வருகிறோம். ஆண்டு முழுவதும் வினியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். இது குறித்து புதிய திட்டங்கள் பரிசீலனையில் இருககின்றன. தக்காளியின் முதன்மை செயலாக்கம், சேமிப்பு மற்றும் மதிப்பீட்டு பணிகளில் புதிய ஆலோசனைகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.காலநிலை மாற்றம், பொருளாதார சூழல் காரணமாக தக்காளி விநியோகமும் பாதித்துள்ளது. தக்காளியை நீண்ட தூரம் எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஜூன்-ஆகஸ்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் குறைவான உற்பத்தி காரணமாக தக்காளி விலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.

இந்தியாவில் தக்காளி விலை ஆண்டுதோறும் இதே காலகட்டத்தில் விலை ஏற்றம் நிகழ்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. தக்காளியை பொறுத்தவரை பருவநிலை தவறினால் விலை ஏற்றம் நிகழும். சேமித்து வைக்கமுடியாவிட்டால் ஒரிரு நாளில் அழுகிவிடும் என்பதால் நஷ்டமும் அதிகம். நிரந்தர தீர்வு இல்லாவிட்டால், தக்காளி விலை உயர்வு, அதன் காரணமாக பொருள் இழப்புகளை தவிர்க்க முடியாது.

logo
Kalki Online
kalkionline.com