மெட்டாவில் தொடரும் இரண்டாம் கட்ட பணி நீக்கம்!

Meta
Meta
Published on

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் தனது பணியாளர்களில் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

தற்போது உலகம் முழுக்க பல்வேறு சவாலான நெருக்கடியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெட்டா நிறுவனம் தனது 13% ( 11,000) ஊழியர்களை பணிநீக்கம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் புதிதாக 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

மெட்டா நிறுனம் 2022 ஆம் ஆண்டு பாதியில் இருந்து சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த நிலையில் லேப்ஆப்-ஐ நவம்பர் மாதம் அறிவித்தது. இதை தொடர்ந்து 2வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தற்போது அறிவிக்க உள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய செலவு குறைப்பு நடவடிக்கையானது வந்துள்ளது.

ம்பெர்க் அறிக்கையின் படி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியினை இழக்கலாம் என தெரிகிறது. இந்த பணி நீக்கத்தில் எந்த ஊழியர்கள் எல்லாம் இருக்க போகிறார்கள் என்ற பட்டியலை தலைமை நிர்வாகம், துணை தலைவர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com