‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையில் நடுவானில் வெடித்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்!

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையில் நடுவானில் வெடித்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்!
Published on

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியது. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களில் திடீரென ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஹவாய் தீவு அருகே உள்ள பசிபிக் கடலில் இது விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படும் இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் முதலில் வெற்றிகரமாகவே விண்ணில் கிளம்பியது. சில நிமிடங்களில் பூஸ்டர் பகுதியைத் தனியாகப் பிரிக்கும் முறையை ஆரம்பித்தபோது ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்த போது எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை என்றும் இதில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஸ்டார்ஷிப் ராக்கெட் அனுப்பும் சோதனை விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக உள்ள எலான் மஸ்க், மேலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. இந்த ராக்கெட்டிற்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டது.

இந்த ராக்கெட் மூலம் நிலவு, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் ராக்கெட் தளத்திலிருந்து ஸ்டார்ஷிப் என்ற உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com