அரசு வேலை பெறுவதற்காக சமர்பிக்கப்பட்ட சான்றிதழ்களின் திடுக்கிடும் செய்தி!

அரசு வேலை பெறுவதற்காக சமர்பிக்கப்பட்ட சான்றிதழ்களின் திடுக்கிடும் செய்தி!
Published on

அரசு வேலை பெற போலி சான்றிதழ் பயன்படுத்துவோர் மத்தியில், 100% மதிப்பெண்கள் பெற்று நம்பிக்கை ஏற்படுத்திய இளைஞர்:

அரசு வேலை பெறுவதற்காக சமர்பிக்கப்பட்ட சான்றிதழ்களில் தகிடுதத்தம் செய்து போலி சான்றிதழ்களைச் சமர்பித்து கையும் களவுமாகப் பிடிபடுவோர் அதிகரித்து வரும் அதேவேளையில் சில மாவட்டங்களில் தாம் சமர்பித்த சான்றிதழில் குறிப்பிட்டிருந்தபடி நிஜமாகவே 100% மதிப்பெண்களைப் பெற்ற இளைஞர் ஒருவர் தேர்வு அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஒதிஷா, ராயகடாவில் தபால்துறை வேலை பெறுவதற்காக ஒருவர் போலி கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அரசு வேலைக்கு சான்றிதழ் அடிப்படையில் தேர்வாகி இருந்த அந்த நபரின் வேலைவாய்ப்பு இறுதியாக நடைபெறக்கூடிய நேர்முகத் தேர்வில் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்பே தீர்மானமாகும் என்றிருந்த நிலையில், நேர்முகத்தேர்வில் சம்மந்தப்பட்ட நபரால் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் அளிக்க முடியவில்லை. சான்றிதழ்களில் அவர் காட்டியிருந்த 99% மதிப்பெண்களை அவர் தான் படித்துப் பெற்றாரா என்ற சந்தேகம் அவரை நேர்காணல் செய்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. வேலை தொடர்பாகவும், அவர் சமர்பித்திருந்த சான்றிதழ் அடிப்படையில் அவர் பயின்றதாகச் சொல்லப்பட்ட பாடங்கள் அடிப்படையிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பை நிறுத்தி வைத்து சான்றிதழ்களின் நம்பகத் தன்மையைச் சோதிக்க உத்தரவிட்டனர். அவர் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் அங்கு பயிலவே இல்லை. அந்த சான்றிதழ்கள் போலி எனத் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அவரது வேலை வாய்ப்பைத் தடுத்து வைத்தனர்.

இந்நிலையில் ஒதிசா மாநிலம், கஞ்சம் வட்டாரத்தில் மேலுமொரு நபர் 100% மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்புக்கு தகுதியானவராகத் தேர்வாகியிருந்த விஷயம் அதிகாரிகளை மேலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. தபால் சான்றிதழ் மோசடி பல மாவட்டங்களில் தலை தூக்கும் அதே வேளையில் சில மாவட்டங்களில் இப்படி ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது என வியந்த அதிகாரிகள் அந்த நபருடைய சான்றிதழ்களையும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டனர். சோதனையில் அந்த நபர் 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வானது உண்மை தான் எனக் கண்டறியப்பட்டது.

ராயகடா அஞ்சல் வட்டத்தில் வேலை கிடைப்பதற்காக போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்ததாகக் கூறி கிராமின் டாக் சேவக் (ஜிடிஎஸ்) வேலைக்கு தேர்வாகியிருந்த ஒருவரை ராயகடா டவுன் போலீஸார் கைது செய்தனர். GDS பதவிகளுக்கு பெறப்பட்ட 34 விண்ணப்பங்களில், சுமார் 26 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் உண்மையானவை என

கண்டறியப்பட்டது. இருப்பினும், சரிபார்ப்பு செயல்பாட்டின் போது ரபி ஹியால் சமர்ப்பித்த சான்றிதழில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

உத்தரபிரதேச வாரியத்தில் சான்றிதழைப் பெற்ற ஹியால், அனைத்து பாடங்களிலும் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. வேட்பாளரிடம் விசாரித்ததில் திருப்திகரமான பதிலை பெற முடியவில்லை என கூறப்படுகிறது.

துணை கண்காணிப்பாளர் சி ஜவஹர், ஹியாலின் ஆவணங்களை UP வாரியத்தின் ஆன்லைன் போர்ட்டலுக்கு அனுப்பினார், மேலும் அவை போலியானவை என்பதை வெளிப்படுத்திய வாரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார்.

இதையடுத்து ஜவகர் ராயகடா போலீசில் புகார் செய்தார். விசாரணையின் போது, ஹியால், தான் உபி போர்டு தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்றும், ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த பிகாரி ஒருவரிடமிருந்து மதிப்பெண் பட்டியலை வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டார்.

“இருப்பினும் வேட்பாளரால் பிகாரியின் முகவரியைக் குறிப்பிட முடியவில்லை. பிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக் கண்டுபிடித்து விடுவோம். இன்று விடுமுறை என்பதால் சரிபார்ப்பு செயல்முறை சனிக்கிழமையுடன் முடிவடையும், ”என்று ஐஐசி கேபிகே கன்ஹர் கூறினார்.

இதற்கிடையில், வேலைவாய்ப்புக்கு தேர்வாகி இருந்த மற்றொரு இளைஞர் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதைக் கண்டு பெர்ஹாம்பூர் அஞ்சல் பிரிவு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். கஞ்சமின் பத்ராபூர் தொகுதிக்கு உட்பட்ட தும்பகடா கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் தில்லேஸ்வர் நாயக் 2020 ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேச வாரியத்தில் சான்றிதழ்களைப் பெற்றிருந்தார். அவர் தனது முதல் மொழி ஒடியா மற்றும் இரண்டாம் மொழி தெலுங்கு உட்பட அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

தபால் கோட்ட கண்காணிப்பாளர் தாரிணி பதி கூறுகையில், தில்லேஸ்வர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வானவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். "அதன் நம்பகத்தன்மையை மேலும் சரிபார்க்க, நாங்கள் அவரது மதிப்பெண் பட்டியலை ஆந்திர வாரியத்திற்கு அனுப்பினோம், அது சான்றிதழ் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியது. எனவே, வேட்பாளர் பெரும்பாலும் GDS வேலையைப் பெறுவார், ஆனால் இவ்விஷயத்தில் மேலும் சரிபார்ப்பு தேவை,” என்று அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com