கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை!

கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகளிடம்  மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை!

கலாஷேத்ரா கல்லூரியில், பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி 2 வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

சென்னை கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வழக்கில் பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பாக ஹரிபத்மன் உள்பட 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்த நிலையில் 2 டிஎஸ்பிக்கள், பெண் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் குழு கலாஷேத்ரா சென்று விசாரணையை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக இன்று கலாஷேத்ரா மாணவிகளை சந்தித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதனிடையே பாலியல் தொல்லை புகாரில் கைதான கலாஷேத்ரா கல்லூரி நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com