பங்களாதேஷில் வலுக்கும் போராட்டம்… 100 பேர் பலி… இந்தியர்கள் செல்ல தடை!

Bangladesh Protest
Bangladesh Protest
Published on

பங்களாதேஷில் சமீபக்காலமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதால், ஏறதாழ 100 பேர் பலியாகியுள்ளனர். ஆகையால், இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இதனால், இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

போராட்டக்காரர்கள் கண்முன் தெரியாமல் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17ம் தேதி பங்களாதேஷ் பிரதமர், தொலைக்காட்சியில் உரையாற்றினார். வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். அதற்குக் காரணமானவர்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரையும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இந்த உரைக்கு பிறகுதான், மேலும் போராட்டம் வலுத்தது. நாட்டின் அரசாங்க வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காட்டுப் பணிகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கே ஒதுக்கப்படுகிறது என்பதே போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. எனவே அந்த வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையே போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கும் வரைப் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தற்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனால், காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் இதுவரை இத்தனைப் பேருக்கு எலிக்காய்ச்சல்… சுகாதாரத்துறை அறிவிப்பு!
Bangladesh Protest

"இந்தியாவின் உதவி உயர் தூதரகம், சில்ஹெட்டின் அதிகார வரம்பில் வசிக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரநிலைகள் ஏற்பட்டால், தயவுசெய்து +88-01313076402ஐத் தொடர்பு கொள்ளவும்." என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்தியாவிலிருந்து அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான அமைதியின்மை காரணமாக, 76 வயதான அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com