ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்து...கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும் அதனை தொடர்ந்த அரசியல் காய் நகர்ந்தலும் என பரபரப்பான இருந்து கொண்டிருந்த தமிழக அரசியல் சூழலில் இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டது தி .மு.க தரப்பு. இத்தகைய அரசியல் சூழலில் அரசியல் ஆர்வலர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படுவதில் வியப்பேதுமில்லை.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், சட்டமன்றத்தில் உரையை மாற்றி படித்தது மற்றும் பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். அதனை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளாகிய கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இதனை தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற இந்த விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். டித்து முக்கிய அரசியல் நிகழ்வாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com