
’மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்’ முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
ஒரு காலத்தில் கழிபறை கழிவுகளை ரு சமுதாயத்தினர் அள்ளி அதை சுத்த படுத்தினார். பிறகு அரசு அறிவிப்பை தொடர்ந்து அந்த முறை கைவிடப்பட்டது. நவீன கழிப்பறைகள் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் என் அரசின் அறிவுரை படி கழிப்பறைகள் கிராமத்திலும் கட்ட ஆரம்பித்தனர்.
ஆனாலும் நகர் புறங்களில் மனித கழிவை இயந்திரம் மூலம் எடுக்கும் முறை படி கிராமத்தில் மனித கழிவுகளை இன்னொரு மனிதன் எடுக்கும் பழக்கம் இன்றும் இருந்து கொண்டுருக்கிறது.
கிராமங்களில் இதற்கான விழிப்புணர்வு இல்லை.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையில் அதிகம் பேர் இறந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
மத்திய சமூக நீதித் துறையின் புள்ளிவிவரங்களின்படி 2019 முதல் 2024 வரையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர்.!
63 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் 51 உயிரிழப்புகளுடன் ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தலா 49 உயிரிழப்புகளுடன் குஜராத்தும் உத்தரப் பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒரு மனிதன் கழிவை இன்னொரு மனிதன் அள்ளும் இந்த நிலைமை மாற வேண்டும்.
செப்டிக் டேங்க் சுத்தப் படுத்தும் போது அதிலிருந்து வரும் வாயு மூலம் மூச்சு திணறி இறக்கிறார்கள்.
வேண்டாம் இனி இந்த விஷ பரிட்சை.