

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' (New START), வரும் 2026 பிப்ரவரி 5 அன்று காலாவதியாகிறது. இரு நாடுகளின் அணு ஆயுத எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதும் இந்த ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கமாகும்.
அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வெதேவ் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் 2010 ஏப்ரல் 8 அன்று கையெழுத்தானது. பின்னர் 2011 பிப்ரவரி 5 அன்று இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதன் முழுப்பெயர் “Treaty between the United States of America and the Russian Federation on Measures for the Further Reduction and Limitation of Strategic Offensive Arms” என்பதாகும். இது இரு வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக நிலவும் இறுதி ஒப்பந்தமாகும்.
இதன் இலக்குகளாக ஒவ்வொரு நாடும் அதிகபட்சம் 1,550 அணுசார்ந்த கருவிகள் (strategic warheads)அணு வெடிகுண்டுகள் (Deployed Nuclear Warheads) மட்டுமே நடைமுறையில் வைத்துக் கொள்ள முடியும் என்றும் 700 பயன்பாட்டில் உள்ள ஏவுகணைகள் & குண்டுவீசும் விமானங்கள் (ICBM, SLBM, Heavy Bombers)800 மொத்த ஏவுதளங்கள் (பயன்பாட்டில் + சேமிப்பில்) இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்த இலக்குகள் இரு நாட்டின் அணு ஆயுதங்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் ஆன்சைட் (on-site) பரிசோதனைகள், தரவு பரிமாற்றம் மற்றும் தடை புள்ளிகள் போன்ற கண்காணிப்பு செயல்முறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் ஆரம்பத்தில் 10 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
2021 இல் இரு நாடுகளும் ஒப்பந்து காலத்தை மூன்று வருஷங்களுக்கு 5 பிப்ரவரி 2026 வரை (5 ஆண்டுகள்) செல்லும் வகையில் நீட்டித்துக் கொண்டனர்.
இந்நிலையில் அணு ஆயுதக் கட்டுப்பாட்டைத் தொடா்ந்து நிலைநிறுத்த, ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை ரஷிய அதிபா் புதின் பரிந்துரைத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதற்கு இன்னும் அதிகாரபூா்வமாகப் பதில் அளிக்கவில்லை எனவும் குறிப்புகள் கூறுகிறது.
ஒப்பந்தம் முடிந்தால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த கட்டாய அமல் இல்லாமல் இருக்கும் என்பதால் பனிப்போா் காலத்துக்குப் பிறகு முதல்முறையாக இரு நாடுகளும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அணு ஆயுதங்களை குவிக்கும் போட்டியில் இறங்கும் அபாயம் ஏற்படும் என்று தெரிகிறது.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய டிரம்ப், 'இந்த ஒப்பந்தம் காலாவதியானால் ஆகட்டும். இதைவிட சிறந்த ஒரு புதிய ஒப்பந்தத்தை நாம் உருவாக்குவோம்' என்று கூறியதுடன் சீனாவையும் புதிய ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்தார். ஆனால் சீனாவோ தங்களிடம் மிகக் குறைவான அணு ஆயுதங்களே இருப்பதால், இந்தப் பேச்சுவாா்த்தையில் இணைய மறுத்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்காவும் ரஷியாவும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் போகும் நிலை உருவாகும்.
உலகின் 90% அணு ஆயுதங்கள் இந்த இரு நாட்களிடமே இருப்பதால் இந்த ஒப்பந்தம் இல்லையென்றால் புதிய அணு ஆயுத போட்டிகள் , உலகப் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் மற்றும் உலக அளவில் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையும் ஏற்படுத்தும் சூழல் உருவாகும் என்று நிபுணா்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையில் உலக நாடுகளின் கவனம் தற்போது டிரம்ப் அறிவிக்கும் முடிவின் மீது உள்ளது எனலாம். அந்த முடிவு மீண்டும் ஒரு அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமா அல்லது உலக அமைதிக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமா என்பதை எதிர் பார்த்துள்ளனர் உலக அமைதியை விரும்பும் நாடுகள்.