லெபனானின் தெற்கு கடற்கரையை விரைவில் தாக்கவுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், இதை செய்யாமல் போரை நிறுத்தவே மாட்டோம் என்று அமெரிக்கா சபதம் எடுத்துள்ளது.
இஸ்ரேல் காசா போர் தொடங்கி ஒரு வருடக் காலம் ஆகிவிட்டது. ஆனால் போர் முடிந்தப்பாடு இல்லை. மேம்மேலும் வலுவடைந்துக் கொண்டேதான் வருகின்றது. ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை குறிவைத்துதான் தற்போது இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருக்கும் ஏராளமான மக்கள் தற்போது புலம்பெயர்ந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உட்பட முக்கிய நபர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து போர் தீவிரமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேலின் தரைப்படை வீரர்கள் தரை வழியாகவும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்தநிலையில்தான் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனே அங்கிருந்து விலகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே இருக்குமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பின் உதவியோடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேசுகையில், “பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் குடும்பத்துடன் ஒன்றிணையும் வரை அமெரிக்கா ஓயப்போவதில்லை. ஹமாஸ் அமைப்பு தொடங்கிய போரின் பாதிப்புகளை பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணயக்கைதிகளை திரும்ப கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்று பேசினார்.
இதனால், இஸ்ரேல் காசா லெபனான் போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.