கின்னஸ் சாதனை படைத்த குள்ள ஆணழகனின் திருமணம்!

மும்பை பரபர
கின்னஸ் சாதனை படைத்த குள்ள ஆணழகனின் திருமணம்!
Published on

மும்பை ராய்கட்டைச் சேர்ந்த இளைஞன் பிரதிக் வித்தல் மோகிதே (வயது 28) உலகின் மிக குள்ளமான ஆணழகன் என்ற சாதனையை 2021ஆம் ஆண்டு பெற்றார்.

3 அடி 4 அங்குலம் உயரமுடைய இவர், 4 அடி 2 அங்குலம் உயரமுடைய 22 வயதான ஜெயா என்கிற பெண்ணை மணந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது வைரலாகி இருக்கிறது. பிரதிக் மணமகன் உடையில் குத்தாட்டமும் போட்டுள்ளார்.

இரு வீட்டார் சம்மதத்துடன், நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

இது விஷயமாக பிரதிக் கூறியதாவது “2012 ஆம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அச்சமயம் எனது உயரத்துக்கு உடற்பயிற்சி கருவிகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டேன். 2016ஆம் ஆண்டில் ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன். எனது நண்பர்கள் ஆலோசனைப்படி, கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்தேன். குள்ளமான ஆணழகன் என்ற பட்டம் 2021ஆம் ஆண்டில் கிடைத்தது மகிழ்வாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயாவை சந்தித்த நான், காதலிக்கத் தொடங்கினேன். எனது கட்டுமஸ்தான உடல் அமைப்பைக் கண்டு அவரும் என்னைக் காதலிப்பதை உணர்ந்த பின், சென்ற வாரம் திருமணம் செய்துகொண்டோம்.” 

குள்ளர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.

வாழ்க மணமக்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com