திருமண கொண்டாட்டத்தில் நடனமாடிய பெண் நிலைகுலைந்து விழுந்து திடீர் மரணம்!

திருமண கொண்டாட்டத்தில் நடனமாடிய பெண் நிலைகுலைந்து விழுந்து திடீர் மரணம்!

இந்த சம்பவம் நிகழ்ந்தது மார்ச் 16 ஆம் தேதி என்கிறார்கள். ஆனால், இது குறித்து காவல்துறையில் புகார் பதியப்பட்டது நேற்றுத்தான் என்கின்றன அச்சு ஊடகங்கள். ஹைதராபாத், கம்மம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டுத் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற போது அங்கு திருமணக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது மணப்பெண்ணை அவளது கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் “அப்பங்கிதலு” எனும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. கம்மம், அல்லீபுரத்தைச் சேர்ந்த 30 வயது ராணி, சீதம்பேட் கிராமத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம் நடனமாடிக் கொண்டிருந்த ராணி பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தார். விழுந்தவர் தானே எழுந்திருக்க முயற்சிக்காத நிலையில் அங்கிருந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், தரையில் விழுந்து கிடந்த அவரிடம் சலனமில்லை. அவரது நிலைமையைக் கண்டு பயந்து போன உறவினர்கள் உடனடியாக ராணியைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு உடனடியாக மருத்துவர்கள் ராணியைச் சோதித்து விட்டு அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தது உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மணவிழா.. மரணவிழா ஆனதைக் கண்டு ஸ்தம்பித்துப் போன உறவினர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர். ராணியின் உடனடி மரணத்துக்கு அங்கிருந்த மருத்துவமனை மருத்துவர்களால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதத்தில் மட்டும் இது போன்று 5 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இறந்த அனைவருக்குமே வயது 18 முதல் 40 வயதுக்குள் தான் இருப்பதாகத் தகவல். இறந்ததற்கான பொதுவான காரணமாகப் பதிவாகி இருப்பது மாரடைப்பு. தெலுங்கானா கலப்பதார் கிராமத்தில் கடந்த ஃபிப்ரவரி 20 ஆம் தேதி 40 வயது நபர் ஒருவர் , இதே போன்று திருமணத்தில் மணப்பெண்ணுக்கு ஹல்தி வைக்கும் சடங்கின் போது, திடீரென நிலைகுலைந்து உயிரிழந்து தரையில் விழுந்தார். மார்ச் 4 ஆம் தேதி கல்லூரி தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்த 18 வயது பொறியியல் மாணவன் ஒருவன் திடீரென அதே இடத்தில் விழுந்து உயிரிழந்தான்.

இது போன்ற மரணங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறித்து மருத்துவர்கள் காரணம் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com