மரியான் பயோடெக் நிறுவனத்தின் இரண்டு இருமல் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு தடை!

மரியான் பயோடெக் நிறுவனத்தின் இரண்டு இருமல் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு தடை!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட18 குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்தை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது.

பரிசோதனையில் இந்த இரண்டு இருமல் மருந்துகளிலும் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் அளவுக்கு அதிகமான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு மருந்துகளும் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் நோய்கு கொடுக்க உகந்ததல்ல என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை தரமற்றது என்றும் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே மரியான் பயோடெக் நிறுவனம் மருந்து தயாரிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த இரண்டு இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு உலக நாடுகளை கேட்டுக்கெண்டுள்ளது.

இந்த சம்பம் உலக அளவில் இந்திய மருந்துகளின் நற்பெயர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com