உலகளவில் தற்போது பேசுப்பொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர ஆர்ஜேவை (RJ) அமெரிக்கா வானொலி நிலையமான 95.5 உருவாக்கி சாதனைப்படைத்துள்ளது.
வளர்ந்துவரும் நவீன காலகட்டத்திற்கேற்ப அனைத்து இடங்களிலும் மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ரோபோக்கள் இறங்கிவிட்டன. அந்தவகையில் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இதனால் பல துறைகளில் பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள 95.5 என்ற வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) உருவாக்கி உள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆல்பா மீடியாவின் கேபிஎப்எப் லைவ் 95.5 FM ஆனது பியூட்டரி மீடியாவின் (Futuri Media) ரேடியோ ஜிபிடி (RadioGPT) மென்பொருளைப் பயன்படுத்தி இந்த டிஜேவை உருவாக்கியுள்ளது.
இது குறித்து கூறிய ஆல்பா மீடியாவின் நிர்வாக துணைத் தலைவர் (ஈவிபி) பில் பெக்கர், ரேடியோ GPT ஆனது அதிகமான நிகழ்வுகளில், உள்ளடக்கத்தை (Content Creators) உருவாக்குபவர்களை காட்சிப்படுத்தவும், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில், தகவல்களை தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், பாடல்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தளமான ஸ்பாட்டிபை (Spotify UK) அயர்லாந்தில் உள்ள பிரீமியம் வாடிக்கையாளர்களுக்காக டிஜே எனப்படும் AI அம்சத்தை வெளியிட்டது. இந்த அம்சம் முதலில் பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிரீமியம் சந்தாதாரர்களுக்குக் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கேபிஎப்எப் லைவ் 95.5 FM உருவாக்கியுள்ள DJ என்றழைக்கப்படும் வானொலி தொகுப்பாளருக்கு AI Ashley (ஆஷ்லி) என பெயரிடப்பட்டுள்ளது. இது உண்மையில் லைவ் 95.5 இல் பணிபுரியும் ஆஷ்லே எல்ஸிங்காவின் குரலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு 'AI ஆஷ்லே' என்று பெயரிடப்பட்டது. இதற்கு சக்தியூட்டுவது Futuri Media's RadioGPT ஆகும், இது GPT-4 ஐப் பயன்படுத்தி ஒரு ஸ்கிரிப்டை உருவாக்க பயன்படுகிறது. ட்ரெண்டிங் செய்திகளளை செயற்கைக் குரல் மூலம் நோயர்களுக்கு படித்து காட்டுகிறது.
அதேபோல் அவர்களுக்கு பிடித்தமான பாடல்களையும் ஒளிப்பரப்புச் செய்கிறது. வானொலியில் பேசும் போது தன்னை AI Ashley என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்குகிறது இந்த புதிய வானொலி RJ. அதேநேரம் கேபிஎப்எப் லைவ் 95.5 FM பணிப்புரிந்து வந்த நிஜ ஆஷ்லியும் தன்னுடைய வானொலி தொகுப்பாளர் பணியை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.