உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

Coral reef
Coral reef
Published on

பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.

தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமான் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்டர் தீவுக்கூடம் அருகே இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பவளப் பாறைகள் 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது. வானில் இருந்துப் பார்க்கும்போது பவளப்பாறை தெரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பவளப்பாறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட இந்த பவளப்பாறை தற்போது ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், புவி வெப்பமடைதல் இந்த பவளப்பாறைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

34 மீட்டர் அகலம் (111 அடி) மற்றும் 32 மீட்டர் நீளம் (104 அடி) கொண்ட மெகா பவளப்பாறையே இதற்கு முன்னர் மிகப்பெரிய பவளப் பாறையாக இருந்தது. ஆனால் அதைவிட இந்த பவளப்பாறை மூன்று மடங்கு பெரியதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலின் இந்தப் பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசியுள்ளனர். அதாவது, “பூமியில் கண்டுபிடிக்கப்பட வேறு எதுவும் இல்லை என்று நாங்கள் நினைத்த நேரத்தில்தான் இந்தப் பவளப்பாறையை கண்டுபிடித்தோம். இது வண்ணமையாக இருக்கும் ஒரு உயிருள்ள பவளப்பாறை.

இதையும் படியுங்கள்:
யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!
Coral reef

இது சுமார் 300 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. ஒரு சிக்கலான சுற்றுச்சூழலில்தான் வளர்ந்து வருகிறது. இது மற்ற பவளப்பாறைகளிலிருந்து வேறுப்பட்டதாக உள்ளது. பல தனித்துவமான பவள காலனிகளில் இருந்து உருவாகியிருக்கிறது. இது ஒரு நீள திமிலங்கத்தைவிட நீளமானது மற்றும் பிரம்மாண்டமானது.” என்று பேசியுள்ளனர்.

கடலில் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் பவள பாறைகள் உருவாகின்றன. இதனை நீங்கள் அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளில் பார்க்கலாம்.. மேலும் இவை ஏராளமான கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன. சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இப்பவளப் பாறைகள் காணப்படுகின்றன. இவை "கடல்களின் மழைக்காடுகள்" என அழைக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com