டெபாசிட் தொகை பெறத் தகுதி பெற்றார் தென்னரசு!

டெபாசிட் தொகை பெறத் தகுதி பெற்றார் தென்னரசு!

ரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 48 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதனால் இவரது வெற்றி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் தொகையையாவது பெறுவாரா என்ற கேள்வி பலரது எண்ணமாக இருந்தது. இவர் டெபாசிட் தொகையை திரும்பப் பெற 28,365 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில், தற்போது இவர் 28,637 வாக்குகள் பெற்று தனது டெபாசிட் தொகையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதிமுக வேட்பாளரான தென்னரசு தனது சொந்த வார்டான சொக்காய் தோட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை குறைவான வாக்குகள் பெற்றிருப்பதுதான். அதாவது, அந்த வார்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெறும் 192 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால், இந்த வார்டில் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 463 வாக்குகள் பெற்றுள்ளார். இது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட 271 வாக்குகள் குறைவானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com