"நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளது" செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Minister Ma. Subramanian
Minister Ma. Subramanian

நீட் தேர்வு குறித்த தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இது தொடர்பான தகவல் ஒன்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள நிலையில், நீட் தேர்வில் மிகபெரிய மோசடி நடந்துள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.   

கடந்த ஜூன் 4 ஆம் தேதி நீட் தேவுக்கான முடிவுகள் வெளியாகிது. அதில் இருந்தே நீட் தேர்வுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம்  உள்ளது. அந்த வகையில் இன்று காலை தேசிய தேர்வு முகமை "நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் வரும் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு முடிவுகள் வரும் 30 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்" என்று உச்சநீதிமன்றத்திற்கு தகவல் அளித்தது.

அதை தொடர்ந்து, "நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்ப பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள்  சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும். மறுத்தேர்வுக்கு வர மறுக்கும் மாணவர்களுக்கு அவர்களின் அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்."  என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கினை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய மா. சுப்பிரமணியன், "2017 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முந்தையை ஆண்டுகளை விட இந்த ஆண்டு 67 பேர் நீட் தேர்வில் முதல் மதிபெண்கள் பெற்றிருப்பது அச்சத்தையும், குளறுபடியையும் ஏற்படுத்துகிறது. இதில் தேசிய தேர்வு முகமை சொன்ன காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இதையும் படியுங்கள்:
நீட் மறுதேர்வு நடத்தப்படும் - தேசிய தேர்வு முகமை தகவல்!
Minister Ma. Subramanian

உச்ச நீதி மன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கவில்லை. மாணவர்களின் நேர தாமதத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப் பட்டது, என்று தேசிய தேர்வு முகமை கூறுவது சாத்தியமற்றது. தாமதமாக வருவோரை அனுமதிக்காத நிலையில், பிறகு எப்படி நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது? அவர்களுக்கு ஏன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது? நீட் தேர்வில் பெரிய மோசடி நடந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த மருத்துவ கல்வி மாணவர்களும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com