பட படவென பட்டாசுகளை வெடிக்க வேண்டுமா? இதை படிங்க முதல்ல....!

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை
பட்டாசு
பட்டாசு

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் எதுமில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது உச்ச நீதி மன்ற உத்தரவின் படி கடந்தாண்டை போலவே வழக்கம் போல் காலை ஆறுமணி முதல் ஏழு மணி வரை மற்றும் மாலை ஏழு மணி முதல் எட்டு மணிவரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அதே போன்று தவுசண்ட் வாலா டென் தவுசண்ட் வாலா போன்ற சர வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி பட்டாசு
தீபாவளி பட்டாசு

அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுநலச்சங்கங்கள் பொது மக்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து பட்டாசு வெடிக்க அறிவுரை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்ற கூடிய குடிசை மற்றும் மருத்துவமனை பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் காற்று மாசு அடைவதை தடுக்க பசுமை பட்டாசுகளை பயன்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது .

இந்த இனிய தீபாவளி நாட்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து நமது சுற்று சூழலை பாதுகாப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com