நாய் பிரியர்களே… இனி இந்த நாய்களை இந்தியாவில் வளர்க்கவே கூடாதாம்!

Banned Dogs in India
Banned Dogs in India

ஆக்ரோஷத் தன்மைக் கொண்ட நாய்கள் தொடர்ந்து ஆக்ரோஷமான செயல்களில் ஈடுப்படுவதைக் கருத்தில்கொண்டு அந்த நாய்களை வாங்கி வளர்க்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவையடுத்து கால்நடைத்துறை வெளியிட்ட அறிக்கையில், இனி இதுப்போன்ற நாய்களை வாங்கவோ வளர்க்கவோ கூடாது என அறிவித்திருக்கிறது. முன்னதாக பல ஆக்ரோஷமானச் செயல்களில் ஈடுபட்ட நாய்களைப் பற்றி சில காலமாக கேட்டு வந்த டெல்லி உயர்நீதிமன்றம், விலங்கு நல வாரியத்திடம் கூறி இதுகுறித்த விசாரணையை நடத்தி வந்தது.

மேலும் ஆக்ரோஷமான நாய்கள் என்னென்ன உள்ளன என்பதையும் கண்டுபிடித்து அவற்றைத் தடைச் செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ஏற்கனவே வீட்டில் வளர்த்து வந்த அந்த நாய்களைச் சில கட்டுபாடுகளுடன் வளர்க்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு 9 நாய்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. Boerboel, Bandog, Neapolitan Mastiff, American Bulldog, American Pit Bull Terriers, Wolfdog, Presa Canario, Fila Brasilicero, Dogo Argentina ஆகிய நாய்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் சில காலங்களுக்குப் பிறகு இந்தத் தடைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க விலங்கு கருத்தடைத் திட்டங்களை ஆராய மாநிலங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து மீண்டும் தற்போது அந்த நாய்களுடன் சேர்த்து இன்னும் சில நாய்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 • Pitbull Terrier

 • Tosa Inu

 • American Staffordshine Terrier

 • Fila Brasileiro

 • Dogo Argentino

 • American Bulldog

 • Boerboel

 • Kangal

 • Russian shepherd

 • Tornjak

 • Sarplanniac Japanese Tosa

 • Akita Mastiffs

 • Rottweiler

இதையும் படியுங்கள்:
லோக்சபா தேர்தல்: 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!
Banned Dogs in India
 • Terriers

 • Rhodesian Ridgeback

 • Wolf Dogs

 • Canario

 • Akbash Dog

 • Moscow Guard Dog

 • Cane Corso

இந்த வெளிநாட்டு நாய்களைத் தற்போது இந்தியாவில் வளர்க்கக்கூடாது எனவும், இனி வாங்கக்கூடாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடைச் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com