புனித நூலைக் கேடயமாக்கி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கோழைகள் அவர்கள்: அஜ்னாலா போராட்டம் குறித்து பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ்!

புனித நூலைக் கேடயமாக்கி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கோழைகள் அவர்கள்: அஜ்னாலா போராட்டம் குறித்து பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ்!
Published on

சண்டிகர்: அஜ்னாலா போராட்டம் குறித்து பஞ்சாப் டிஜிபி கூறுகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் குரு கிரந்த் சாஹிப்பைக் கேடயமாகப் பயன்படுத்தி போலீஸைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.

அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று காவல்துறையினருக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் சாமர்த்தியமாக சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பை  பயன்படுத்தி தடைகளை உடைத்ததாகவும் பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறினார்.

துறவியும், காலிஸ்தானி ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் புனித குரு கிரந்த் சாகிப்பை கேடயமாகப் பயன்படுத்தி, கோழைத்தனமான முறையில் காவலர்களைத் தாக்கியதாகக் கூறினார். அவர்களில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜுக்ராஜ் சிங் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

ஜுக்ராஜ் சிங் முன்னாள் தேசிய ஹாக்கி வீரர் ஆவார்.அஜ்னாலா காவல் நிலையத்தில் காவலர்களைத் தாக்கிய போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அமிர்தசரஸ் மத்திய சிறையில் இருந்து லவ்ப்ரீத் சிங் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, யாதவ், "அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உறுதியளித்த போதிலும், போராட்டக்காரர்கள் கூரிய ஆயுதங்களால் காவல்துறையினரைத் தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

குரு கிரந்த் சாஹிப்பை கேடயமாக்கிக் கொண்டு போராட்டக்காரர்கள் காவலர்களை மிக மோசமாகவும் தந்திரத்துடனும் தாக்கினர். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் புனிதமும், மரியாதையும் இந்தத் தாக்குதல் மற்றும் கிளர்ச்சியால் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என போலீஸார் மிகுந்த கவனத்துடனும், நிதானத்துடனும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இந்தக் கலவரத்தில் போரட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தால் அது மேலும் பிரச்சனைகளுக்கு வழிவகுத்திருக்கக் கூடும். இப்போதும் கூட போலீஸ் சூப்பிரண்ட் ஜூக்ராஜ் சிங் உட்பட ஆறு போலீசார் காயமடைந்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஜுக்ராஜ் சிங்குக்கு 11 தையல் போடப்பட்டுள்ளது.

 "காயமடைந்த காவலர்கள் பேசுவதற்கான தெம்பைப் பெற்றதும், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று யாதவ் மேலும் கூறினார்.

அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று காவல்துறையினருக்கு உறுதியளித்திருந்தனர், ஆனால் அவர்கள் தங்களுக்கான தடைகளை உடைக்க குரு கிரந்த் சாஹிப்பை மறைமுக உபாயமாகக் கையாளத் தொடங்கி விட்டனர் என்று யாதவ் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com