என் பெற்றோரை இந்தியில் பேச வற்புறுத்தினார்கள்; நடிகர் சித்தார்த்!

சித்தார்த்
சித்தார்த்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

மதுரை விமான நிலையத்தில்  பாதுகாப்பு படை வீரர்கள் எனது பெற்றோரை இந்தி பேச சொல்லி வற்புறுத்தி காக்க வைத்தனர் என்று நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 -இதுகுறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப் பட்டதாவது;

 மதுரையிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்வதற்காக என் பெற்றோர் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்கள் கொண்டு கைப்பையை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யும்போது, அந்த கைப்பையில் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த பையிலுள்ள நாணயங்களை அகற்றுமாறு மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் என் பெற்றோரிடம் இந்தியில் கூறியுள்ளனர்.

என் பெற்றோர் தங்களுக்கு இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்து, மேலும் மேலும் இந்தியில் மட்டுமே பேசியதுடன் என் பெற்றோரை 20 நிமிடங்கள் காக்க வைத்தனர்.

 -இவ்வாறு நடிகர் சித்தார்த் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com