நியூயார்க் டைம் சதுக்கத்தில் முதல்  முறையாக  துணிவு!

நியூயார்க் டைம் சதுக்கத்தில் முதல் முறையாக துணிவு!

முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒன்று டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது . துணிவு படத்தின் வீடியோ காட்சிகள் நாஸ்டாக்கட்டிடத்தில் திரையிடப்படும் என்றும் அப்போது செல்ஃபி எடுத்து அனுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு துணிவு படத்தின் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொங்கலை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் தல அஜித்தின் துணிவு.

ஹெச் வினோத் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம். தல அஜித்துக்கு கம்பேக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளதால், துணிவு ரிசல்ட் எப்படி இருக்கும் என பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப் படுகிறது. சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவைத்து அனைவரும் அறிந்ததே .

துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில்உள்ள நாஸ்டாக் கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com