தொடங்கியது கந்த சஷ்டி.. திருச்செந்தூரில் களைகட்டும் திருவிழா..!

முருகன்
முருகன்
Published on

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழா தொடங்கிய நிலையில், இன்று யாகசாலை பூஜை நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான உலகப் புகழ் பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர் கோவிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 3.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் விஸ்வரூப தீபாராதனையும் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்றது. இதில் கந்த சஷ்டி விரதம் இருக்க கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 18ஆம் தேதியும் திருக்கல்யாணம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த கோயிலில், சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தரிசனத்திற்கான கட்டணங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை நபர் ஒருவருக்கு ரூ.100 ஆக இருந்த தரிசன கட்டணம், ரூ.500 ஆகவும், ரூ.2000ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3000 ஆகவும், நேரடி சிறப்பு தரிசன கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com