அடுத்த மாதம் திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. டிக்கெட் எப்போது வெளியாகிறது தெரியுமா?

சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும், சொர்க்கவாசல் திறப்புக்கான 300 ரூபாய் டிக்கெட் , வரும் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. 

பெருமாளை வழிபடுபவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய கண்முழித்து சொர்க்கவாசல் திறப்பதை பார்ப்பார்கள். அப்படி பார்த்தால் சொர்க்கத்தை அடைவோம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படி பலரும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 108 திவ்ய தேச பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை காண செல்வார்கள்.

அப்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். பொதுவாகவே தினசரி லட்சக்கணக்கில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்த பிரச்சனையை தவிர்க்க திருப்பதி ஏழுமலையானை காண ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும்.

அந்த வகையில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை ஒட்டி, டிசம்பர் 23 முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும், என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு நாளைக்கு, 22ஆயிரத்து 500 பேருக்கு, என 10 நாட்களுக்கு 300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்பட இருக்கிறது.  இதேபோல், இலவச தரிசனம் செய்ய வருவோருக்கு, ஒரு நாளைக்கு 42 ஆயிரத்து 500 டோக்கன்கள் என 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சொர்க்கவாசல் திறக்கும் பத்து நாட்களில் மட்டும் ஏழு முதல் 8 லட்சம் பக்தர்கள், ஏழுமலையானை வழிபடும் வகையில், ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இலவச தரிசன டோக்கன்கள் தேவைப்படும் பக்தர்கள் கவுண்டர்களுக்கு நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து, பெற்று கொள்ளலாம் என்றும். இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்க, கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என்றும், தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com