#BIG NEWS : கதிகலங்கிய கேரளா: திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்!

Thirussur Fire 13 killed
Thirussur Fire Accident
Updated on

கேரளாவில் திருச்சூர் பூரம் உலகப் புகழ் பெற்றது. பூரம் நிகழ்ச்சியின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும். பூரம் திருவிழாவில் பட்டாசுகளை வெடிப்பதற்காகவே , அதை தயாரிக்க தனியாக பட்டாசு கிடங்கு முண்டத்திகோட்டில் உள்ளது.

இன்று மதியம் அந்த பட்டாசு கிடங்கில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் , 40 பேர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களில் 5 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலரது உடல்கள் அடையாளம் கண்டறிவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த வெடி விபத்தில் பலியானவர்கள் பலரும் , பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள். தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினர் , மருத்துவ குழுக்கள் வந்து உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த இடத்தில் தொடர்ச்சியாக பட்டாசுகள் எடுத்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணியிலும் சிக்கல்கள் நிலவுகிறது.விபத்திற்கான காரணங்களை அறிய காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்த விபத்து கேரளாவை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com