ஜோதியாய் விளங்கும் அண்ணாமலையார்.. கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா!

அண்ணாமலையார்.. கொடியேற்றம்
அண்ணாமலையார்.. கொடியேற்றம்

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை மாதம் முக்கிய நாளான தீபத்திருவிழாவில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஜோதியை காண ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி தீபத்திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இன்று காலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக நேற்றைய தினம் விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 23 ஆம் தேதி மகா தேரோட்டமும், 26 ஆம் தேதி தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளில் இருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com