திருவண்ணாமலை தீப திருநாள்; கூடுதலாக 3 ஆயிரம் பஸ்கள் இயக்கம்!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்லும் வசதிக்காக கூடுதலாக 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் அக்கோயிலில் கார்த்திகை மகா தீபம் டிசம்பர் 6-ம் தேதி ஏற்றப்படுகிறது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கார்த்திகை தீபத்தை காண வருகை தருவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் கார்த்திகை தீப திருவிழா எளிமையாக நடந்தது.

இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி மகா தீபமும், டிசம்பர் 7-ம் தேதி பெளர்ணமியும் வருவதால் சுமார் 40 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட உள்ளன.

குறிப்பாக, கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆரணி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கூடுதலாக 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com