Disney + Hotstar-ல் இனி இந்த வசதி கிடையாதாம்

Disney + Hotstar-ல் இனி இந்த வசதி கிடையாதாம்

ப்ரல் ஒன்றாம் தேதி முதல் Disney + Hotstar பயனர்களுக்கு, HBO உள்ளடக்கத்தை வழங்கப்போவது கிடையாது என்று அறிவித்துள்ளது. இதை அந்நிறுவனம் தனது Twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனால் அதன் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்தியாவில் மிகவும் பிரபலமான OTT தளங்களில் Disney+Hotstar-ம் ஒன்றாகும். பல்வேறு விதமான வெப் தொடர்கள், ஐபிஎல் கிரிக்கெட், சமீபத்திய திரைப்படங்கள் என இந்த ஓடிடி தளம் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் HBO உள்ளடக்கங்கள் இனி எங்கள் ஓடிடி தளம் மூலமாக இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இனி, பயனர்கள் Game of Thrones, The Last Of Us, House of Dragon, Silicon Valley போன்ற தொடர்களை இதில் காணமுடியாது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் The Last of Us என்ற தொடர், Disney+Hotstar-ன் சமீபத்திய வெற்றிகளில் மிகவும் பிரபலமானதாகும். மேலும், இந்த தளத்தில் வருடா வருடம் ஒளிபரப்பப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகளும், இந்த ஆண்டு ஸ்டிரீம் செய்யப்படாது. ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் Viacom 18 நிறுவனத்திற்குக் கிடைத்துவிட்டது. 

ஆசியாவிலேயே இந்தியாவில்தான் Disney+Hotstar  பயனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், 2022 செப்டம்பர் முதல் டிசம்பர் மாதத்துக் குள்ளாக, 61 மில்லியன் பயணங்களில் இருந்து 57 மில்லியன் பயனர்களாகக் குறைந்துவிட்டது. மேலும், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தத் தளத்தில் வெறும் மூன்று மாதத்தில் 164 மில்லியனிலிருந்து 161 மில்லியனாக பயனர்கள் குறைந்துவிட்டார்கள். 2019க்கு பிறகு இவர்களுடைய மிகப்பெரிய இழப்பு இதுவாகும். இதனால் டிஸ்னி நிறுவனம் தங்களின் 7000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. 

இந்தியாவில் பொதுவாகவே ஆங்கிலக் கண்டெண்ட் பார்க்கும் பயனர்கள் மிகவும் குறைவு. சராசரியாக 50 சதவீதம் நபர்கள் ஹிந்தி மொழி திரைப்படங்களையும், தொடர்களையும் பார்க்கிறார்கள் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் இந்தி கன்டெண்ட் பார்ப்பதை விட, Disney + Hotstarல்தான் அதிகமாகப் பார்க்கப்படுகிறதாம்.

எனவே, இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டுவதற்கு, HBO தொடர்களை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், தங்கள் தளத்தில் ஒளிபரப்பப் போவதில்லை என்று முடிவுக்கு வந்துள்ளார்கள். 

மேலும் HBO நிறுவனமும் தங்களின் HBO MAX INDIA என்ற சொந்த ஓடிடி தளத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, HBO Hotstarல் இருந்து ஒதுங்கியதற்கு இதுதான் உண்மையான காரணமாக இருக்கலாமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com