உலகிலேயே முதன்முறையாக 2026-ஐ வரவேற்றது கிரிபட்டி தீவு! - மக்கள் கொண்டாட்டம்..!

Happy New Year
Happy New Year - 2026
Published on

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.

உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளில் ஆங்கில புத்தாண்டு பிறந்தது. அத்தீவு 2026 ஆம் ஆண்டுக்குள் மகிழ்ச்சியுடன் அடி எடுத்து வைத்துள்ளது.

அதாவது இந்தியாவை நேரத்தை காட்டிலும் 8.5 மணி நேரம் முன்னதாக அங்கு நள்ளிரவு முடிந்து, அதிகாலை தொடங்கும். அந்த தீவில் வசிக்கும் மக்கள் புத்தாண்டை தற்போது கொண்டாடி வருகின்றனா்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தீவில் 7,500 மக்கள் வசிக்கின்றனர்.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். நியூசிலாந்தின் சில பகுதிகளிலும்,ஆஸ்திரேலியாவிலும் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வட கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா, வங்கதேசம், சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன்னதாகவே அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.

இந்திய நேரப்படி எந்தெந்த நாடுகள் எப்போது 2026-க்குள் நுழைகின்றன என்பதைக் கீழே காணலாம்:

நேரம் (இந்திய நேரப்படி)நாடு / பகுதி

பிற்பகல் 3:30 (டிச 31)கிரிபட்டி (Kiribati) - உலகிலேயே முதலிடம்

பிற்பகல் 4:30 (டிச 31)நியூசிலாந்து (ஆக்லாந்து, வெலிங்டன்)

மாலை 6:30 (டிச 31)ஆஸ்திரேலியா (சிட்னி, மெல்போர்ன்)

இரவு 8:30 (டிச 31)ஜப்பான், தென் கொரியா, வட கொரியா

இரவு 9:30 (டிச 31)சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

இரவு 10:30 (டிச 31)இந்தோனேசியா, தாய்லாந்து

இரவு 11:30 (டிச 31)வங்கதேசம்

இரவு 11:45 (டிச 31)நேபாளம்

நள்ளிரவு 12:00 (ஜன 1)இந்தியா மற்றும் இலங்கை

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஒரே நாளில் 2வது முறையாக குறைந்த தங்கம் விலை..! சவரன் 1 லட்சம் கீழ் இறங்கியது..!
Happy New Year

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com