முழுமையான செயற்கை இதயத்துடன் வாழ்ந்த உலகின் முதல் மனிதர் இவர்தான்!

Heart
Heart
Published on

இயற்கை கொடுத்த இந்த உடலில் செயற்கையான இதயத்தைக் கொண்டு வாழ்ந்த உலகின் முதல் மனிதன் குறித்துதான் தற்போது பார்க்கவுள்ளோம்.

பொதுவாக உடம்பில் எந்த உறுப்பு சரி இல்லையென்றாலும், இதயம் இருந்தால் வாழலாம். இதயம் மட்டும் அதன் வேலையை நிறுத்திவிட்டால், அவர் உயிர் சென்றுவிடும் என்பது இயற்கை. ஒரு உடலுக்கு இன்றியமையாதது இதயம். மருத்துவத்துறையில் எப்படிப்பட்ட சாதனைகள் படைத்தாலும், ஒருவரை இதயம் இல்லாமல் வாழ வைக்கும் சாதனையானது நிச்சயம் போற்றுதற்குறியது.

அப்படித்தான் சமீபத்தில் லூயிஸ் என்பவர் கிட்டத்தட்ட 12 மணி நேரம் இதயம் இல்லாமல், இதயத்துடிப்பும் இல்லாமல் வாழ்ந்தார். இதனால், அவர்தான் இதயம் இல்லாமல் வாழ்ந்த உகலகின் முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால், இப்போது ஒருவர் செயற்கையான இதயத்தைக் கொண்டு வாழ்ந்த உலகின் முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

நியு சவுத் வேல்ஸை சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் BIVACOR என்ற முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவருடைய உடம்புக்கு ஏற்ற இதயம் கிடைக்காததால் அந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

ஆனால், இந்த மாதம் தொடக்கத்தில் அவருக்கு வேறு ஒருவரின் இதயம் கிடைத்ததால், மாற்று அருவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இந்த செயற்கை இதயத்தால், இயற்கை இதயம் கிடைக்கும் வரை ஒருவரின் மரணத்தை தள்ளிப் போடலாம். 10 ஆண்டுகளாக, தானம் செய்யப்படும் இதயங்களுக்காக காத்திருக்கவோ அல்லது பெறவோ முடியாதவர்களுக்கு இது உதவும்.

BiVACOR என்றழைக்கப்படும் மொத்த செயற்கை இதயத்தை குயின்ஸ்லாந்தில் பிறந்த டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்தார்.

இதுவே உலகின் முழு செயற்கை இதயமாகும். இதனை முதன்முதலில்   ஜூலை 2024 இல் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் ஒரு மனிதனுக்கு பொருத்தப்பட்டது. ஆனால், அவர் இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளார்.

அதன்பின்னர் மேலும் 4 அமெரிக்கர்களுக்கு பொருத்தப்பட்டது. அவர்களும் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஹோலியில் ஏன் வண்ணங்களை பூசுகிறார்கள்- செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
Heart

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com