உலகையே சுற்றும் பிரம்மாண்ட 21 நாள் ரயில் பயணம்! 13 நாடுகள்..21 நாட்கள்...18750 கி.மீ தூரம்..!

THIS is world’s longest train journey
THIS is world’s longest train journeysource:newws24online
Published on

நீங்கள் உலகம் சுற்றுவதில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பிரியரா? அதிலும் ரயிலிலேயே நீண்ட தூரம் பல நாடுகளை கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என நினைப்பவரா? இதோ உங்கள் எண்ணம் நிறைவேற வாய்ப்பு கிடைத்து விட்டது.

போர்ச்சுகல் நாட்டின் லாகோஸ் (Lagos)ல் துவங்கி சிங்கப்பூர் வரை பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட ரயில் பாதை தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ளது. லாகோஸ் மற்றும் சீனா இடையே ப திறக்கப்பட்ட 260 மைல் நீளமான ரயில் பாதையில் பயணிக்கும் இந்தப் பயணம் உலகின் மிக நீண்ட ரயில் பயணமாக (11,650 மைல்கள்) இருக்கும் எனக் கருதப்படுகிறது.

போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை ஓரத்தில் தொடங்கி, ஆசியாவின் கடைக்கோடியான சிங்கப்பூர் வரை ரயிலிலேயே பயணிக்கும் பிரம்மாண்ட வழித்தடம் மூலம் 21 நாள் பயணத்தில் நீங்க கடக்கப்போகும் தூரம் சுமார் 18,750 கிலோமீட்டர்கள். ஒரு மாத கால உலகச் சுற்றுப்பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.

"உலகின் மிக நீண்ட ரயில் பயணம்” என்பது நேரடி ஒரே ரயில் அல்ல என்பதை கவனிக்க வேண்டும். பல ரயில் மாற்றங்களுடன் பல நாடுகள் செல்லும் தொடர்ச்சியான சர்வதேச ரயில் வழித்தடம். பயண தூரமும், நாடுகளின் எண்ணிக்கையும் காரணமாக இதை longest possible train journey என அழைக்கப்படுகிறது.

இந்த நீண்ட ரயில் பயணம் வெறுமனே பயணமாகாமல் ஐரோப்பாவின் அழகில் தொடங்கி ஆசியாவின் காடுகள் வரை மட்டுமின்றி உலக அதிசயங்களைக் காண்பதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

வழித்தடம் ஒன்று என்றாலும் ரயில்கள் மாறுவதன் மூலம் போர்ச்சுகலில் தொடங்கி ஸ்பெயின், பிரான்ஸ் (பாரிஸ்), ஜெர்மனி வழியாக போலந்து வரை ஒரு அதிவேகப் பயணம் , மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வரை ரஷிய நிலப்பரப்பை ரசிக்கும் உலகப் புகழ் பெற்ற மிக நீண்ட 7 நாள் ரயில் பயணம் என அனுபவிக்கலாம்

மேலும் சீனாவிலிருந்து வியட்நாமின் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்கள் வழியாகச் செல்லும்போது, காலநிலை மாறி கண்களைக் கவரும் பசுமையான காடுகளை கண்டு களிக்கலாம். வியட்நாமிலிருந்து கம்போடியாவுக்கு (ரயில் பாதை இல்லாததால்) செல்ல ஒரு சிறு பேருந்து பயணம் பின் அங்கிருந்து தாய்லாந்து, மலேசியா வழியாகச் சிங்கப்பூரை அடையலாம்.

பயணத்தின் மொத்த விவரம் தேவைப்படுபவர்களுக்கு சுருக்கமாக சில நாடுகள் விபரம் மட்டும் இங்கு.

லாகோஸ், போர்ச்சுகலிலிருந்து சிங்கப்பூர் வரை சுமார் 18,000 – 18,700 கி.மீ வரையுள்ள மொத்த தூரத்தை வழித்தடத்தைப் பொறுத்து சுமார் 20 – 22 நாட்கள் பயணத்தில் 13–15 நாடுகள் செல்லும் வசதி.

முக்கிய ரயில் வழித்தடங்களாக ஐரோப்பா Lagos லிருந்து Lisbon, Madrid, Paris ,Berlin , Warsaw Moscow என நீள்கிறது வழிகளின் பட்டியல். Beijing / Kunming வரை சீனாவின் விரிவான ரயில் தடம் Thailand (Bangkok) Bangkok , Kuala Lumpur , Singapore என சென்று நிறைகிறது.

ஒரே நிலப்பரப்பில் (land route) விமானம்/கப்பல் போன்ற போக்குவரத்து இல்லாமல் தொடர்ந்து ரயில் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்பதால் இது “உலகின் மிக நீண்ட ரயில் பயணம்" ஆகிறது. குறிப்பாக இதற்கு முன் சிங்கப்பூர் வரை ரயில் இணைப்பு இல்லை என்பதும் சீனா–லாவோஸ் ரயில் (2021) திறந்த பிறகே இந்த பயணம் முழுமையாக சாத்தியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உலகளாவிய ரயில் இணைப்பின் பயன்களாக சீனா – ஐரோப்பா – தென்கிழக்காசியா இணைப்பின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா , சரக்கு போக்குவரத்துக்கு உதவும் புவியியல் ஒருங்கிணைப்பும் உள்ளது சிறப்பு.

இந்த மெகா ரயில் பயணத்தை திட்டமிடும் முன் இதிலுள்ள நடைமுறை சவால்களை சிந்திக்க வேண்டும். ஏனெனில் ஒரே டிக்கெட் கிடையாது ஒவ்வொரு நாட்டுக்கும் தனித் தனி டிக்கெட், விசா விதிகள் (Schengen, Russia, China, SE Asia), ரயில் மாற்றங்களில் தாமதம், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட சில சர்வதேசக் கட்டுப்பாடுகளால் அரசியல் / எல்லை கட்டுப்பாடுகள் (சில நேரங்களில் வழித்தடம் மாறலாம்) போன்றவைகளை கவனிக்க வேண்டும்.

அத்துடன் 20 நாட்களுக்கு மேலாக ரயிலிலேயே பயணிப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் நிலை மற்றும் மனநிலை தேவை என்பது முக்கியம்.இந்த 21 நாள் பயணத்தில் நீங்கள் ஒரு தேசத்தின் குடிமகனாகப் பயணிப்பதில்லை, மாறாக உலகக் குடிமகனாக மாறுகிறீர்கள்.

ஒரு மாத கால உலகச் சுற்றுப்பயணம் :

இந்த 21 நாள் பயணத்தில் நீங்க கடக்கப்போகும் தூரம் சுமார் 18,750 கிலோமீட்டர்கள்.

தொடக்கம்: லாகோஸ் (Lagos), போர்ச்சுகல்.

முடிவு: சிங்கப்பூர்.

பயணச் செலவு: ஒரு நபருக்கு சுமார் £1,000 முதல் £1,500 வரை (ஏறத்தாழ ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் - சிங்கப்பூர் இடையேயான 10,500 மைல் பயணமே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. இப்போது லாவோஸில் திறக்கப்பட்ட புதிய பாதை அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு..!
THIS is world’s longest train journey

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com