விவசாயியை கொள்ளையனாக மாற்றிய ஆன்லைன் ரம்மி... என்று ஒழியும் இந்த ஆன்லைன் விளையாட்டு மோகம்.

விவசாயியை கொள்ளையனாக மாற்றிய ஆன்லைன் ரம்மி... என்று ஒழியும் இந்த ஆன்லைன் விளையாட்டு மோகம்.

ந்த விளையாட்டைபொறுப்புடன் விளையாடுங்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சொல்வது போல் பொறுப்புள்ளவர்களையும் புதைகுழியில் தள்ளி பொறுப்பற்றவர்களாக மாற்றி விடுகிறது இந்த விளையாட்டு. பொறுப்புள்ள விவசாயியை தனக்குள் ஈர்த்து கொள்ளையனாக மாற்றிவிட்டது ரம்மி. அதைப்பற்றிய செய்திதான் இது.


       ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை  இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் மூதாட்டியிடம் கொள்ளையடித்ததாக விவசாயி கண்ணன் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வேதனையான சம்பவம் ஆத்தூரில் நிகழ்ந்துள்ளது. 

    ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி செல்லம்மாள். 72 வயது மூதாட்டி. கடந்த ஒன்றாம் தேதி விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த செல்லம்மாளை ஒருவர் தாக்கி 15 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளார். அவர் தாக்கியதால் காயம் அடைந்த செல்லம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகன் கண்ணன் செல்லம்மாளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

       உடனே போலீசார் கண்ணனை கைது செய்தனர் அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டன மேலும் அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் “ஆன்லைன் ரம்மி விளையாட்டில் எனக்கு ஆர்வம் உண்டு. எங்களுக்கு சுமார் 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடுவேன். இதில் எனக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டது அப்படி இருந்தும் எப்படியாவது இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்று நினைத்து மீண்டும் மீண்டும் ஆன்லைனில் ரம்மி விளையாடினேன்.

கண்ணன்
கண்ணன்

    ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பணம்  50 லட்சம் ரூபாயை தாண்டியது. எனது வீட்டில் வாங்கியது மட்டுமல்லாமல் வெளியிலும் ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தேன். அதே சமயம்  கடன்காரர்ளும் கடனைத் திரும்பத் தரச்சொல்லி என்னை நெருக்கத் தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து மீள வேண்டும் கடனை அடைக்க வேண்டும் அதற்கான தீர்வு கொள்ளையடிப்பதுதான்  என முடிவு செய்தேன். அப்போது தனியாக இருக்கும் பெண்களிடம் அதிலும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்தால் நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தேன். கடைசியாக செல்லம்மாளை தாக்கி நகையை பறித்தேன். போலீஸில் சிக்கிக்கொண்டேன்” என்று  அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .

       ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 50 பேர் வரை பணத்தை இழந்ததுடன் உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை கேட்டு சட்டசபையில் சட்டம் இயற்றி கவர்னருக்கும் இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து இன்னமும் அவர் முடிவு எடுக்கவில்லை

          இதற்கு இடையே ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த விவசாயி கண்ணன் இன்று ஆன்லைன் ரம்மியால் கடனாளி ஆகி இருப்பதுடன் அந்தக் கடனை அடைக்க கொள்ளையனாகவும் மாறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது . இன்னும் என்னவெல்லாம் செய்யப்போறதோ இந்த ஆன்லைன் மோகம். அதற்குள் கவர்னர் நல்ல சேதி சொல்வாரா? பொறுத்திருந்து பாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com