ட்விட்டருக்கு போட்டியாக இணையதளக் களத்தில் இறங்கும், ‘த்ரெட்ஸ்’ செயலி!

ட்விட்டருக்கு போட்டியாக இணையதளக் களத்தில் இறங்கும், ‘த்ரெட்ஸ்’ செயலி!
Published on

ணையதள சேவையில் பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி பொதுமக்களுக்கு இலவச செயல்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்தில் அந்த நிறுவனத்தை உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு சந்தா செலுத்தினால்தான் ட்விட்டர் செயலியின் பிரத்யேக சேவைகளைப் பெற முடியும் என்ற கட்டுப்பாட்டை அந்த நிறுவனம் அறிவித்தது.

ட்விட்டர் பயனாளர்கள் பலரையும் இந்தச் செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி, தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதைக் குறைக்கும் விதமாகவும் ட்விட்டர் பதிவுகளைக் காண எலன் மஸ்க் அண்மையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்குப் போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ‘த்ரெட்ஸ்’ (threads) என்ற புதிய செயலியை நாளை மறுநாள் முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்தப் புதிய செயலி வரும் 6ம் தேதி அமெரிக்காவிலும், மற்ற நாடுகளில் 7ம் தேதியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கெனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகளை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வரும் நிலையில், ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக இந்த புதிய ‘த்ரெட்ஸ்’ (threads) செயலியும் கள இறங்க இருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com