திருச்சியில் மூன்று நாள் மாநில வேளாண் கண்காட்சி: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!

திருச்சியில் மூன்று நாள் மாநில வேளாண் கண்காட்சி: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநில வேளாண் கண்காட்சி - அக்ரி எக்ஸ்போ 2023 நடத்துவது குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாநில, மண்டல வேளாண் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையின் திருச்சியில் நடைபெறும் மாநில வேளாண் கண்காட்சியை ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடத்துவது என்றும், அங்கு விவசாய பொருட்கள் கண்காட்சி, விற்பனை மற்றும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கண்காட்சியில் வேளாண் சம்பந்தமான பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதோடு, பாரம்பரிய விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட விதைகள், தென்னை மர வகைகள், வாழை மர வகைகள், மல்லிகை விதைகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான இயந்திரங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வேளாண் பொருள் விற்பனையும் நடைபெறுகிறது.

இதில் வேளாண்துறை வல்லுனர்கள், உயர் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மேலும் மாநில கண்காட்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயம் சார்ந்த அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் காட்சிப்படுத்தவும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றும் இதனால் இந்த கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு "அக்ரி எக்ஸ்போ 2023" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com