‘எங்களுக்கும் காலம் வரும்’: நம்பிக்கைக் குறையாத ஓபிஎஸ்!

‘எங்களுக்கும் காலம் வரும்’: நம்பிக்கைக் குறையாத ஓபிஎஸ்!
Published on

ரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ் அணிக்குக் கிடைத்து அவர் பக்கம் காற்று வீசினாலும், அதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்படாமல் இருக்கிறாராம் ஓபிஎஸ். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும் வேட்பு மனு தாக்கல் செய்து, தொகுதியில் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ‘ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதை அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும். இந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வமும் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி, ‘பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாதபட்சத்தில், கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும்’ என்றும் அந்த இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.

அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த சீட்டுகளை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துக் கொடுத்தார். அக்கடிதத் தேர்வின் அடிப்படையில் தற்போது தென்னரசு அதிமுகவின் பொது வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணி விரக்தியில் இருந்தாலும், பெரிதாக இதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காரணம், இந்த இடைத்தேர்தல் வழக்கு பிரச்னையில் எடப்பாடி பழனிச்சாமியை உச்ச நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. மேலும், அவர் அணிக்கு முழுமையாகவும் இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்து விடவில்லை. இரண்டு அணியும் ஒன்றாக இருக்க வேண்டும். பொதுக்குழுவே அக்கட்சி வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. தேர்தல் ஆணையமும், ‘அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. அதை நாங்கள் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் பொதுக்குழு உறுப்பினராக நாங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்றே கூறியது.

இந்த இரண்டுமே எடப்பாடிக்கு மனதளவில் பெரிய விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், பழனிச்சாமி ஆதரவு வேட்பாளர் இந்த இடைத்தேர்தல் போட்டியில் வெற்றி பெற்று களம் கண்டாலும், அவரது வேட்பு மனுவில் எடப்பாடியால் கையெழுத்துப் போட முடியவில்லை. தமிழ்மகன் உசேன்தான் கையெழுத்துப் போட்டுள்ளார். இதனாலேயே ஓ.பன்னீர்செல்வம் அணி சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறதாம். ‘பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதாக இருந்திருந்தால் இதுபோன்று நடந்து இருக்காதே. உச்ச நீதிமன்றமும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்காதே. அதனால் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்களாம். ஓபிஎஸ்ஸும், ‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியோடு காத்திருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com