

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 3 ம்தேதி செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை (7 1/2 மணி) ஏழரை வரை ஏழுமலையான் கோவில் நடை சாற்றப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்கு முன் 2025-ல் மார்ச் 13-14 ல் முதல் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7–8 ல் இரண்டாவது மற்றும் வருடத்தின் கடைசி சந்திர கிரகணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் எப்படி ஏற்படும்?
சந்திரன் பூமியின் நிழலுக்குள் முழுமையாக நுழையும் போது சந்திர கிரகணம் நிகழ்வதாகவும் இந்த நேரத்தில் சந்திரன் பூமியின் குறுக்கீட்டுச் சாய்வு காரணமாக சிவப்பு-பச்சை நிறத்தில் தோன்றும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மார்ச் 3, 2026 (Tuesday) அன்று நடைபெறும் முழு சந்திர கிரகணம் “Blood Moon” என்றழைக்கப்படுகிறது.
ஆன்மீக ரீதியில் சந்திர கிரகணம் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது. சாஸ்திர & புராண நம்பிக்கைகள் வழி சந்திர கிரகணம் என்பது ராகு–கேது சந்திரனை மறைக்கும் காலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. சிறப்பான இந்த நேரம் மனதிற்கும் உணர்ச்சிகளுக்கும் அதிக தாக்கம் தரும் காலம் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த நேரத்தில் நாம் இறை சிந்தனையுடன் தியானம் , மந்திர ஜபம் போன்றவற்றில் ஈடுபட உகந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இறைவன் குடியிருக்கும் ஆலயங்கள் கிரகணங்கள் போது சாற்றப்பட்டு கிரகணம் முடிந்ததும் ஆலயம் முழுவதுமாக தூய்மை செய்த பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுவது இந்து மத சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.
கிரகணம் தொடங்குவதற்கு முன் சுமார் 9 மணி நேரம் சூதக் காலம் (Sutak) எனக் கணக்கிடப்படுகிறது. இந்த நேரத்தில் கோவில் வழிபாடு ,சமையல் , உண்பது , திருமணம் / சுப நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவைகள்தவிர்க்கப்படுகின்றன (இது நம்பிக்கை சார்ந்தது).இப்படி சந்திர கிரகணம் குறித்து ஆன்மீக ரீதியில் சில குறிப்புகள் சொல்கிறது.
மார்ச் 3 அன்று தோன்றும் சந்திர கிரகணம் முழு கிரகணம் என்றாலும் சில செய்திகளில் கிரகணம் மொத்தமாக மாலை 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:47 மணிக்கு முடியும் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் ஆசியா (கிரகணத்தின் சில பகுதிகள், இந்தியா உட்பட) ,ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பிரதேசம் ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காண வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உளவியல் படி சந்திரன் மனதின் மாற்றங்களுக்கு அதிபதி என்பதால் சந்திர கிரகணம் என்பது மனதை சுத்தப்படுத்தும் சக்திவாய்ந்த நேரம் என ஆன்மீக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த நேரத்தில் மனதளவில் கட்டுபாடுடன் கோபம், பயம், குற்ற உணர்ச்சி போன்றவற்றை விட்டு விட தியானம் மௌனம் (Silence) கடைப்பிடித்தல் அவசியமாகும்.
ஆன்மீக விளக்கம் என்பது மன நம்பிக்கை & மரபு சார்ந்தது என்றால் அறிவியல் ரீதியாக சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் இயற்கை வானியல் நிகழ்வு. மட்டுமே எனப்படுகிறது. இதனால் எந்த தீங்கும் இல்லை எனவும் கர்ப்பிணிகள் , உணவு மற்றும் நீர் மீது பாதிப்பு இல்லை எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.