திருப்பதி தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீர் மரணம்!

திருப்பதி தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு  நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீர் மரணம்!

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு நேற்று முன்தினம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடும் மாரடைப்பால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் வரும் ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது, இதனை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது. சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதையொட்டி, கடந்த சில நாட்களாக சந்திரமவுலி ரெட்டி தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார். இந்தநிலையில் சந்திரமவுலி ரெட்டிக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடும் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com