திருப்பதி தரிசனம்; சீனியன் சிட்டிசன்களுக்கு சிறப்பு டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும்.

டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று  காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள்  மற்றும் மூத்த குடிமக்கள் இன்று இணையத்தில் இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com