திருப்பதி கோயிலில் அலப்பறை செய்த டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்படுவார். கடந்த வருடம் கூட காஞ்சிரபும் அருகே பைக் சாகசம் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரது பைக் லைசன்ஸை தடை செய்தது. இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. பிறகும் திருந்தாத வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவரைக் கண்டித்து ஜாமீன் கொடுத்தது.
நண்பர்கள் சிலர் நல்ல புத்தி சொன்னதை அடுத்து அவர்களுடன் சேர்ந்து வாசன் ஒரு பிசினஸ் தொடங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரை யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதனிடையே, ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை செல்லம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரும் குக்வித் கோமாளி சோயாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்று வந்தாலும் திருத்திய பாடில்லை போலும். தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
யூடியூபர் டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் தான் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பதுபோன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை tirupathi Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலமான செயல். அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.