திடீரென ஆவேசமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்!

திடீரென ஆவேசமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்!

விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், அங்கிருந்த அரசு அதிகாரிகளைப் பார்த்து, இவர்கள் வேலையே செய்வதில்லை என்று மோசமாகப் பேசவே திடீரென கோபம் தலைக்கேற மாவட்ட ஆட்சியர் உரக்கக் கத்திப் பேசத்துவங்கினார்..

“சும்மா ஏதாவது பேசனுமேன்னு பேசாதீங்க... என்னுடைய அதிகாரிகளை நான் கோபப்படுவேன், திட்டுவேன். ஆனால், அவர்கள் வேலை செய்யவில்லை என்று நீங்கள் யாராவது சொன்னால் நான் உச்சகட்டமாகக் கோபப்படுவேன். நீங்கள்லாம் 1 மணிக்கு சாப்பிட்டு வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சும்மா ஏதாவது பேச வேண்டுமென்று பேசாதீர்கள். என்னுடைய அதிகாரிகள் 3 மணிக்கு சாப்பிடுகிறார்கள். 4 மணிக்கு சாப்பிடுகிறார்கள். அவர்கள் வேலை செய்யவில்லை என்று பொதுவில் குறை கூறாதீர்கள். அவர்கள் வேலை செய்கிறார்கள். வேலை செய்யாமல் சும்மா இருக்க ஒருவரையும் நாங்கள் விடுவதில்லை. அவர்கள் மீது தனிப்பட குறை இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். ஆனால், பொதுவில் எதையாவது சொல்லாதீர்கள். அவர்களில் பலர் 3 மணிக்கு, 4 மணிக்கு எல்லாம் வேலை பார்க்கிறார்கள், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்கிறார்கள். இந்த வேலை தான் என்று இல்லாமல், சேர்ந்து பல வேலைகளைப் பகிர்ந்து கொண்டு பார்க்கிறார்கள். அதில் எத்தனை பேர் டென்சனோடு சுகருடன், பி பியுடன் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா? அதில் எத்தனை பேர் இஞ்சினியர்கள் இறந்திருக்கிறார்கள் தெரியுமா? சும்மா, நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள். நான் மற்ற கலெக்டர்கள் மாதிரி இல்லை. எனக்கு ரோஷம் இருக்கு, என் அதிகாரிகளை என் முன்னால் வைத்து குறை சொல்வீர்களா? சும்மா பேசாதீர்கள். அவர்கள் வேலை செய்கிறார்கள். அது எனக்குத்தான் தெரியும்.”

-என்று கொந்தளிப்புடன் பேசி முடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com