
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து ஒன்று இன்ரு அதிகாலை விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று இன்று திருவண்ணாமலை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30 பேர் பயணித்து கொண்டிருந்தனர். திருவண்ணாமலையை அடுத்து உள்ள அத்தியந்தல் எனும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.
இதையடுத்து, அந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி அதன் எதிரே இருந்த புளிய மரத்தின் மீது மோதியுள்ளது. இதனால், அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை கண்டு அச்சமடைந்த மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவண்ணாமலை தாலுகா போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவண்னாமலை அரசு மருத்துவமனைக்கு சிகைச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுவரை ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
திருவண்ணாமலை அத்தியந்தல் எனும் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவம் நடந்தவுடன் அருகில் இருந்தவர்களும் போலீசாரும் ஆம்புலன்ஸ்களை வரவைத்ததால் விபத்தில் சிக்கிய அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த அரசு பேருந்து விபத்து திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.