பர்வதமலையில் இத்தனை சிறப்புகள் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

பர்வதமலை
பர்வதமலை

பர்வதமலை.. சிவன் பக்தர்கள் பலரும் கேள்விப்பட்ட பெயராகவும் இருக்கும், சென்று வந்த இடமாகவும் இருக்கும். இதை தாண்டி அந்த ஊர்கார மக்களை தவிர யாருக்கும் பர்வதமலை பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவன் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். இது அவர்களுக்கு மட்டும் இல்லை ட்ரெக்கிங் செய்ய விரும்புவர்களுக்கு கூட இந்த பயணம் ஏற்றதாகவே இருக்கும். அப்படி பர்வதமலை எங்கே இருக்கிறது. அதில் என்ன சிறப்புகள் என்பது பற்றி பார்க்கலாம்.

பர்வதமலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை ஆகும்.

பொதுவாகவே திருவண்ணாமலை என்றால் நமக்கு அண்ணாமலையார் தான் நினைவுக்கு வருவார். ஆனால் அங்கே பர்வதமலையும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இப்படி எண்ணற்ற கொண்ட இந்த மலைக்கு நீங்களும் சென்று சுவாமி-அம்பாளை தரிசியுங்கள். நிச்சயம் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்வது உறுதி என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com