பழைய மற்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? எது சிறந்தது?

பழைய சி.பி.எஸ் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய டேப்ஸ் ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? எது சிறந்தது? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
Pension Scheme
Pension Scheme
Published on

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய விவகாரத்தில் 23 ஆண்டுகளாக நீடித்த குழப்பத்திற்கும், நீண்ட போராட்டத்திற்கும் தீர்வு காணும் விதமாக, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (TAPS) என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பழைய சி.பி.எஸ் (Contributory Pension Scheme) மற்றும் புதிய டி.ஏ.பி.எஸ் (டேப்ஸ்)(Tamil Nadu Government Employees' Pension Scheme - TNGPS)

என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களாகும்.

சி.பி.எஸ் என்பது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டி.ஏ.பி.எஸ் என்பது தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.

சி.பி.எஸ் (CBS) (Contributory Pension Scheme): இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், இதில் அரசு ஊழியர் மற்றும் அரசு இருவரும் பங்களிப்பார்கள். 2004-க்கு பிறகு அரசு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இது அமல்படுத்தப்பட்டது.

டி.ஏ.பி.எஸ் (TAPS) (Tamil Nadu Government Employees' Pension Scheme): இது புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இதை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களை ஒத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் பயனாளர்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
Pension Scheme

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme - OPS): இது அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் முறை, இது 2004-க்கு முன் இருந்த திட்டம்.

கடந்த 2003-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு சி.பி.எஸ். என்ற புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற டி.ஏ.பி.எஸ்.(டேப்ஸ்) எனும் புதியவகை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சி.பி.எஸ் (CBS) மற்றும் டி.ஏ.பி.எஸ் டேப்ஸ் இரண்டில் சிறந்தது என்று அறிந்து கொள்ளலாம்...

சி.பி.எஸ் (CBS) : தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் சி.பி.எஸ்.க்கு உட்படுத்தப்பட்டனர். சி.பி.எஸ் பங்களிப்பு ஒய்வூதிய திட்டமாகும். இது ஊழியர்கள் 10 சதவீதமும், அரசு 18 சதவீதமும் மாதந்தோறும் பங்களித்து சேமிக்கும் ஓய்வூதியத் திட்டமாகும்.

அதேபோல் சி.பி.எஸ்-ல் ஊழியரிடம் பிடிக்கப்படும் தொகை, அரசு பங்களிப்புடன் சேர்த்து தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்யப்படுகின்றது. இந்த பணம் அரசு நிர்ணயித்த நிதி நிறுவனங்களில் விதிமுறைப்படி முதலீடு செய்யப்படுகிறது. அதில் கிடைக்கும் வட்டி-முதலீட்டு வருமானம் அந்த கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது.

ஓய்வூதியக் கணக்கில் உள்ள இந்த பணம் ஊழியர் ஓய்வு பெறும் போது 60 சதவீதம் ரொக்கமாக கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். அதேசமயம் அது உறுதியான ஓய்வூதியத்தை தராது.

டி.ஏ.பி.எஸ் டேப்ஸ் : தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் உறுதி ஓய்வூதியத் திட்டமாகும். இதில் ஓய்வூதியம் அரசால் உறுதி செய்யப்படுகிறது. டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும். இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் போன்ற நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டேப்ஸ் ஓய்வூதியத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், ஒரு ஊழியர் கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். அதாவது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை கூட்டினால் கிடைக்கும் மொத்த தொகையில் 50 சதவீதம் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும். அதேசமயம் டேப்ஸ்-ல் குடும்ப ஓய்வூதியமும் உண்டு. ஓய்வூதியர் இறந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத்தின் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வு அல்லது பணிக்கால மரணத்தில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும். தகுதியான பணிக்காலத்தை முடிக்காத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படும்.

CPS-இல் சேர்ந்து, TAPS தொடங்குவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலன்களுக்கு இணையாக நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
தடையற்ற ஓய்வூதியம் பெற இந்தச் சான்றிதழை சமர்ப்பிக்க மறக்காதீங்க!
Pension Scheme

மொத்தத்தில் சி.பி.எஸ். அல்லது டேப்ஸ் எது ஊழியருக்கு பாதுகாப்பானது என்று பார்த்தால், டேப்ஸ் திட்டத்தில் 50 சதவீதம் உறுதி ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி சேர்க்கப்படுகிறது. மேலும் சந்தை அபாயம் எதுவும் இல்லை என்பதால் இதுவே சிறப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com